day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

மீண்டும் 12-ம் வகுப்புக்கு இருபருவ தேர்வு முறை : வரைவு தேசிய பாடத்திட்டத்தில் தகவல்

மீண்டும் 12-ம் வகுப்புக்கு இருபருவ தேர்வு முறை : வரைவு தேசிய பாடத்திட்டத்தில் தகவல்

புதுடெல்லி : புதிய தேசிய கல்விக்கொள்கைக்கு ஏற்ப தேசிய பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது. விரைவில், கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெறுவதற்காக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். அதன்பிறகு, 2024-2025 கல்வி ஆண்டில் இருந்து இது அமலுக்கு கொண்டுவரப்படும் என்று தெரிகிறது. கொரோனா காலத்தில், ஒருமுறை நடவடிக்கையாக, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வுகளுக்கு இருபருவ தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பழைய பாணியிலேயே ஆண்டு இறுதி தேர்வாக நடத்தப்பட்டது. இருப்பினும், வரைவு தேசிய பாடத்திட்டத்தில், 11 மற்றும் 12-ம் வகுப்புக்கு மீண்டும் இருபருவ தேர்வு முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான இறுதி மதிப்பெண்ணுக்கு முந்தைய வகுப்புகளின் மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தற்போது, 11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், அறிவியல், கலை அல்லது மனிதநேயம், வணிகவியல் ஆகிய பிரிவுகளில் எந்த படிப்பையும் கலந்து படிக்கலாம். அந்த வழக்கத்தை ரத்து செய்யவும் வரைவு தேசிய பாடத்திட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!