கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் கடும் வெள்ளம் தேங்கியுள்ளது. மழை நீர் சாலைகளில் தேங்கியுள்ளதால், வீடுகளிலும் சென்றுள்ளது. மேலும் சாலைகளில் இருந்த வாகனங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், பள்ளி மற்றும் அலுவலகம் செல்வோர், படகு மற்றும் டிராக்டர்களைப் பயன்படுத்தி வெள்ளம் சூழ்ந்த பகுதிகளைக் கடந்து வருகிறார்கள். இதனால், அங்கு மக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதேபோல், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக, ஓடைகளில் உடைப்பு ஏற்பட்டு அருகில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த தண்ணீரில், மூதாட்டிகள் இருவர் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.