day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

வங்கிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டம் : அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்

வங்கிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டம் : அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வருகிற 30-ந்தேதி, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. வாரத்துக்கு 5 நாள் மட்டுமே வேலை, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் , 30, 31-ந்தேதிஆகிய 2 நாட்கள் வங்கிகள் இயங்காது. மேலும் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அரசு விடுமுறை நாளாகும். இதனால் நாளையும், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகளுக்கு விடுமுறை. இடையில் வெள்ளிக்கிழமை மட்டும் வங்கிகள் இயங்கும். எனவே வெள்ளிக்கிழமையை தவிர நாளை (26-ந்தேதி) முதல் 31-ந் தேதி வரை 5 நாட்கள் வங்கிகள் செயல்படாது. அதே நேரத்தில் ஏ.டி.எம். மையங்களில் போதிய அளவு பணம் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும், ஆன்லைன் சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!