பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா (பி.எப்.ஐ) மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்துள்ளது. முன்னதாக, தேசிய பாதுகாப்பு முகமை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடத்தின. இதில், ரூ.120 கோடி சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்ததுக்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சகத்துக்கு தகவல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.