சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியாகி ரூ.500 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் இன்று ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியானது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 3,888 மேற்பட்ட இணையதளங்களில் வெளியிடுவதைத் தடுக்க இணைய தள சேவை நிறுவனங்கள் தடுக்கக் கோரி லைகா பட தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி எஸ்.சௌந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.