சூரத் : பிரதமர் மோடி குறித்த அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் ராகுல் காந்தியின் ஜாமீனை ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. அவதூறு வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீர்ப்புக்கு இடைக்கால தடை கோரிய மனுவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மேல்முறையீட்டு மனு விசாரணையை மே 3-ம் தேதிக்கு சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.