ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கா ட்ரோன் மூலம் நடத்திய வான் வழி தாக்குதலில் அல் கயிதா தலைவர் அல் ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க நாட்டின் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். தான் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் வெற்றிகரமாக அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம் நீதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்கள் எங்கே பதுங்கி இருந்தாலும், எவ்வளவு காலம் ஆனாலும் அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அல் கொய்தா தலைவராக பின்லேடன் இருந்தபோது, துணைத்தலைவராகவும் இருந்தவர் அல் ஜவாஹிரி. லேடனின் மறைவுக்குப் பிறகு அல் கொய்தா தலைவரானார் என்பது குறிப்பிடத்தக்கது.