சென்னை: டிரைவர் இல்லாமல் தானாகவே தொலைத் தொடர்பு அடிப்படையிலான கட்டுப்பாட்டு அமைப்புடன் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் டிரைவர் இல்லா பயணிகள் ரெயிலை இயக்குவதற்கு, பல்வேறு பாதுகாப்பு அளவீடுகள் கையாளப்படும். ரூ.1,620 கோடி செலவில் இப்பணிகள் தொடங்க இருப்பதாக சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தச் சிறப்பான கட்டமைப்புக்கு உயரிய பாதுகாப்பு மதிப்பீட்டுக் குழுவால் சான்றளிக்கப்பட இருப்பதாகவும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வெற்றிகரமான பரிசோதனைகளுக்கு பின்னர் ரெயில் கட்டுப்பாட்டு அமைப்பு, தள பரிசோதனை மற்றும் இதர அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்படும். இவ்வாறு மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.