விசாகப்பட்டினம்: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. மும்பையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் 2-வது ஆட்டம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்றது.
டாஸில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இந்தியஅணியை பேட்டிங் செய்யஅழைத்தார். இந்திய அணியில் 2மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இஷன் கிஷன், ஷர்துல் தாக்குர் ஆகியோருக்குப் பதிலாகரோஹித் சர்மா, அக்சர் படேல்இடம் பெற்றனர். அதேபோல் ஆஸ்திரேலிய அணியில்கிளென் மேக்ஸ்வெல், இங்லிஸ் ஆகியோருக்குப் பதிலாக நாதன் எல்லிஸ், அலெக்ஸ் கேரே இடம்பெற்றனர்.
தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோஹித், ஷுப்மன்கில்களமிறங்கினார். முதல் ஓவரிலேயேஷுப்மன்கில்லை ஆட்டமிழக்கச் செய்தார் ஸ்டார்க். 5-வது ஓவரின் 4-வது பந்தில் ரோஹித்தை ஆட்டமிழக்கச் செய்த ஸ்டார்க், முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ். இதனால்3 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் என்ற மோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது. கே.எல். ராகுல் 9, ஹர்திக் பாண்டியா 1, ரவீந்திர ஜடேஜா 16, மொகமது ஷமி 0, மொகமது சிராஜ் 0, குல்தீப் யாதவ் 4 ரன்கள் சேர்த்து வீழ்ந்தனர். 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.
பின்னர் ஆஸ்திரேலிய அணி 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி விளையாடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் ஸ்டார்க்கும், டிராவிஸ் ஹெட்டும் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களைக் குவித்தனர். இதனால் பந்துகள் பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் பறந்தன. 11 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 121 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.