புதுடெல்லி: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி ஆட்டம் தொடருமா என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியா அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் வெற்றியை கைப்பற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இரு அணிகளும் இன்று மோதுவது 104-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 103 போட்டியில் இந்தியா 31-ல், ஆஸ்திரேலியா 43-ல் வெற்றி பெற்றன. 28 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. ஒரு போட்டி ‘டை’யில் முடிந்தது. இன்றைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்கியுள்ளது.