15ஆவது ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்றிரவு துபாயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடந்த 6ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. அறிமுக அணியான ஹாங்காங் அணி கடுமையாக போராடி 10.4 ஓவர்களில் 38 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த வெற்றியின் மூலம் ஆசியக்கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.