8ஆவது ஆசியக்கோப்பை 2022 மகளிர் டி20 போட்டி வங்கதேசத்தில் உள்ள சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், 7 அணிகள் பங்கேற்ற நிலையில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா (10 புள்ளி), பாகிஸ்தான் (10 புள்ளி), இலங்கை (8 புள்ளி), தாய்லாந்து (6 புள்ளி) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியனான வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின. இதையடுத்து, இன்றைய அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி தாய்லாந்து அணியை எதிர்க்கொள்கிறது. முன்னதாக, 6 முறை சாம்பியம் பட்டம் வென்ற இந்திய அணி, அறிமுக அணியாக இந்தாண்டு களம் இறங்கியுள்ள தாய்லாந்து அணியை லீக் சுற்றில் 15.1 ஓவரில் 37 ரன்னுக்குள் சுருட்டியது குறிப்பிடத்தக்கது.