சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 13ஆம் தேதி கொள்ளைக் கும்பல் வங்கியில் இருந்து ரூ.20 கோடி மதி்ப்புள்ள 32 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்றது. இதையடுத்து, காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் கொள்ளை நடந்த வங்கியிலேயே வாடிக்கையாளா் சேவை மையத்தில் மேலாளராக பணியாற்றிய முருகன், தனது இரு நண்பா்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் சூர்யா, செந்தில்குமரன், சந்தோஷ், பாலாஜி ஆகிய 5 பேர் கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது இவர்களை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களிடம் இருந்து சுமார் 30 கிலோ தங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள நகைகளை மீட்க விசாரணை மேற்கொண்டபோது, அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளர் வீட்டில் 3.7கிலோ தங்கம் மறைத்து வைத்திருப்பதாக கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில் மேற்கொாண்ட சோதனையில், காவல் ஆய்வாளர் வீட்டில் இருந்து 3.7கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தநிலையில், இன்று கொள்ளை நகையை வீட்டில் பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக அச்சிரப்பாக்கம் காவல் ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி சத்திய பிரியா உத்தரவிட்டுள்ளார்.