ஜம்மு-காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தின் சக்தாரஸ் பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். உயிரிந்த பயங்கரவாதிகளில் ஒருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அவர் பெயர் டுஃபெயில் என்பதும் தெரியவந்துள்ளது. அதேவேளையில், துப்பாக்கிச் சண்டை நடைபெற்ற இடத்தில் பங்கரவாதிகள் வேறுயாராவது பதுங்கி இருக்கிறார்களா என்று பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல, கடந்த சில தினங்களுக்கு முன் பார்முல்லா மாவட்டத்தின் சோபோர் நகரில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை பாதுகாப்புப் படை வீரர்கள் சுட்டுக்கொன்றனர். முன்னதாக அனந்த்நாத் மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றொரு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி ஒருவரை கொன்று வீழ்த்தினர். ஜம்மு-காஷ்மீர் மாநித்தில் பரவலாக கடந்த சில தினங்களாகவே பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக பொதுமக்கள் தொடர்ச்சியாக தாக்கப்படுவதால் அந்த மாநிலத்தில் பதற்றம் நிலவுகிறது.
jammu and kashmir 2died terrorist attacked