day, 00 month 0000
Breaking News
எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் படுதோல்வி
கல்பாக்கம் அருகே திமுக - அதிமுக மோதல்
காஞ்சி அரசு மருத்துவமனையில் 2 குழந்தைகள் கடத்தல்
அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்க கோரி தேமுதிக ஆர்ப்பாட்டம்

உலககோப்பை கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

உலககோப்பை கால்பந்து போட்டியில் பெனால்டி ஷூட்-அவுட்டில் நெதர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது அர்ஜென்டினா

FIFA2022:கத்தாரில் உள்ள லுசைல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றிக்காக ஆட்டத்தின் இறுதி நொடி வரை போராடின. 35 மற்றும் 73-வது நிமிடத்தில் 2 கோல்களை பதிவு செய்து 2-0 என வலுவான முன்னிலை பெற்றிருந்தது அர்ஜென்டினா.ஆனால், 83-வது நிமிடம் மற்றும் கூடுதல் நேரமாக வழங்கப்பட்ட 10 நிமிடத்தின் கடைசி சில நொடிகள் என 2 கோல்களை பதிவு செய்து 2-2 என சமன் செய்தது நெதர்லாந்து. அந்த இரண்டு கோல்களையும் தன் அணிக்காக வவுட் வெகோர்ஸ்ட் பதிவு செய்திருந்தார். கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.

பெனால்டி ஷூட்-அவுட்ல் அர்ஜென்டினா 4 கோல்கள் பதிவு செய்தது. நெதர்லாந்து 3 கோல்கள் மட்டுமே பதிவு செய்தது. இதனால் வெற்றி பெற்ற அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறி வரும் புதன்கிழமை அன்று குரோஷியாவை அணியை எதிர்கொள்கிறது

angalukkumattum Hospital Building WCF Hospital App & Youtube
error: Content is protected !!