தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் மற்றும் இதர கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் வரும் 12ஆம் தேதி முதல் 26-ம் தேதி வரை https://adm.tanuvas.ac.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, Bachelor of Veterinary Science & Animal Husbandry –B.V.Sc & AH (5 ஆண்டுகள்), B.Tech., Food Technology (4 ஆண்டுகள்), B.Tech., Poultry Technology (4 ஆண்டுகள்), B.Techm, Dairy Technology (4 ஆண்டுகள்) என்ற 4 வகையான படிப்புகளில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கபப்டுகின்றன.