தமிழக விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வாகும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்படும். மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
1. தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்)
(Special Scholarship for Elite Sports persons Scheme- ELITE)
2. பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (Mission International Medals Scheme – MIMS)
3. வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (Champions Development Scheme – CDS)
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக sdat@tn.gov.in என்கிற இணையதள முகவரியும் அறிவிக்கப்பட்டுள்ளது.