புதுச்சேரி மாநிலத்தில் 2022-2023 கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவம் (எம்பிபிஎஸ்), பல் மருத்துவம் (பிடிஎஸ்), கால்நடை மருத்துவம் (பிவிஎம்எஸ்) உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு, சென்டாக் நிர்வாகம் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அதன்படி, மாணவர்கள் சேர்க்கைக்கான அரசு ஒதுக்கீடு, தனியார் நிர்வாக ஒதுக்கீடு, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான ஒதுக்கீடு உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி முதல் சென்டாக் இணைய தளம் (www.centacpuducherry.in) வாயிலாக விண்ணப்பங்களை வரவேற்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தொடர்ந்து, செப்டம்பர் 25ஆம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்களை இணைய வழியில் பெறப்படும் என்றும், மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்கலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு இணையதளத்தை பார்வையிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.