சென்னை: போலீஸ் அதிகாரி கூறுகையில் :- தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு படை அமைக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது. உளவுப் பிரிவில் இருந்து தீவிரவாத எதிர்ப்பு படைக்கு ஆட்கள் வரவழைக்கப்படுகிறார்கள். இந்த படையில் மொத்தம் 383 பேர் இருப்பார்கள். இதற்காக ரூ.57.51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும், கோவை, மதுரை மற்றும் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக எல்லையில் அமைந்துள்ள மாவட்டங்களையும் நாங்கள் கண்காணித்து வருகிறோம். இந்த தீவிரவாத எதிர்ப்புபடை கேரளாவில் தண்டர்போல்ட், ஆந்திராவில் ஆக்டோபஸ், வடமாநிலங்களில் தீவிரவாத எதிர்ப்பு படை ஆகிய பெயர்களில் உள்ளன. தீவிரவாதிகளுக்கு தமிழக எல்லைக்கு அப்பால் தொடர்பு இருந்தால் மற்ற மாநில காவல் துறை அல்லது மத்திய புலனாய்வு அமைப்புகளின் உதவியுடன் வழக்கை எவ்வாறு விசாரிப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.