அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 11ம் தேதி நடைபெறும் என்று அந்த கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கடந்த மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இந்த பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுக்குழுவுக்கான நோட்டீஸ் 15 நாட்களுக்கு முன்பாக வழங்கப்பட வேண்டும். ஆனால் நேற்று மாலை தான் தங்களுக்கு நோட்டீஸ் வந்ததாக முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவசர வழக்காக விசாரிக்கக்கோரி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு ஓ.பி.எஸ். சார்பில் செய்யப்பட்ட முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை நாளை விசாரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளனர்.