11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 27 காலை வெளியானது. இதைத்தொடர்ந்து, மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் விடைத்தாள் நகலைப் பெற்றுகொள்வதற்கு ஜூன் மாதம் 30ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 7ஆம் தேதி வரை பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வர்கள் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். 11ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்றவர்கள் துணைத் தேர்வை ஜூன் மாதம் 29ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பள்ளி மூலம் தேர்வு எழுதிய மாணவர்கள் பள்ளிகள் வாயிலாகவும், தனித்தேர்வர்கள் தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாகவும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுத்துறை சேவை மையங்கள் பற்றிய விவரங்களை http://www.dge.tn.gov.in இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு துணைத் தேர்வு நடைபெற உள்ளது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.