செங்கல்பட்டில் நடந்த மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த முறை இங்கே வரவில்லை என்றால் இனிவரும் காலங்களில் வருவதற்கு வாய்ப்பு இல்லை எனவும் குறிப்பிட்ட அவர், தமிழ்நாடு பாஜகவில் இரண்டு தலைவர்கள் இருப்பதாகவும், அதில் முதலாவதாக இருக்கும் அண்ணாமலை சொல்லுவது தலைமைக்கு ஏற்புடையதாக இல்லாததால் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அந்தப் பொறுப்பை வழங்கி இருப்பதாகவும் கே.எஸ்.அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.