திருப்பதி கோவில் மே மாத உண்டியல் வருமானம் ரூ.132 கோடி
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதம் 22 லட்சத்து 62 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதனால், கடந்த மே மாதம் மட்டும் மொத்த உண்டியல் வருமானமாக ரூ.132 கோடியே 29 லட்சம் திருமலை திருப்பதி கோயிலுக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில், திருமலை திருப்பதி வரலாற்றிலேயே இதுவரை இவ்வளவு பெரிய தொகை உண்டியல் வருமானமாக கிடைத்ததில்லை என்றும் இதுவே அதிகபட்ச உண்டியல் வருமானம் எனவும் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்கோயில் சார்பில் பக்தர்களுக்கு 1 கோடியே 86 ஆயிரம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 47 லட்சத்து 3 ஆயிரம் பத்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 10 லட்சத்து 72 ஆயிரம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி நேற்று திருமலை திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.