கொரோனா இரண்டாம் அலையின்போது நாடு முழுவதும் இருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளிகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், ஆயிரக்கணக்கானோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், நாடாளுமன்ற சுகாதாரத்துறை நிலைக்குழு ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்து தணிக்கை செய்ய மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளது. அதில், கொரோனா இரண்டாவது அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய சுகாதாரத்துறை தணிக்கை செய்ய வேண்டும், வெளிப்படைத்தன்மையுடன் அரசு நிறுவனங்கள் தணிக்கை செய்து ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.