அமெரிக்காவின் இண்டியானாவின் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும், 2 பேர் படுகாயமடைந்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்தநாட்டு காவல்துறையினர் உடனடியாக நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அவ்வப்போது நடந்து வருகிறது. இதற்கிடையில் கடந்த மாதம் துப்பாக்கி வைத்திருப்பதற்கான அனுமதி வழங்குவது குறித்த பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் மசோதாவுக்கு அதிபர் ஜோபைடன் கையெழுத்திட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.