கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய பொருளாதார பேரிழப்புக்கு பிந்தைய காலத்தில் திரைப்பட செலவினங்கள் அதிகரித்துள்ளன. அதே சமயம், ஆர்ஆர்ஆர், கேஜிஎப் போன்ற சில திரைப்படங்கள் தவிர மற்ற படங்கள் தோல்வியை தழுவியுள்ளது. எனவே, திரைப்பட தயாரிப்பு தொழிலை மறுசீரமைக்க ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி முதல் அனைத்து படப்பிடிப்புகளையும் நிறுத்த திட்டமிட்டிருப்பதாக தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. திரைப்படங்களுக்கான பட்ஜெட், ஓடிடி மற்றும் திரையரங்குகளில் படங்களை வெளியிடுவது குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் படப்பிடிப்புக்கள் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.