இயக்குநர் கல்யாண கிருஷ்ணன், பூலோகம் திரைப்படத்துக்கு பிறகு நடிகர் ஜெயம்ரவி உடன் இணைந்து உருவாக்கி உள்ள திரைப்படம் அகிலன். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் வெளியானது. துறைமுகத்தை பிரதான கதைக்கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் காவல் அதிகாரியாக ப்ரியா பாவானி சங்கர், தன்யா ரவிசந்திரன், ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர். ’நகரின் சட்டவிரோத கிங்-னா அது அகிலன் தான்’ என்று தொடங்கும் இந்த படத்தின் டீசரில் அதிரடி சண்டைக் காட்சிகள் மற்றும் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.