ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் ஏகே61 என்ற பெயரிப்படாத திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரகனி போன்ற நடிகர்களும் இணைந்துள்ளனர். இந்த நிலையில், ஏகே61 படக்குழு, ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு திக்குமுக்காட வைத்துள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களுக்குப் பிறகு ஹெச்.வினோத் மற்றும் அஜித் மூன்றாவது முறையாக இணையும் இந்த படத்தின் 70 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்த நிலையில், படத்தின் பெயர் கூட இன்னும் வெளியாகவில்லை என்று ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருந்தனர். இதையடுத்து, வெளியான ப்ர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் சாய்ந்த நிலையில் கையில் துப்பாக்கி வைத்துக்கொண்டு இருக்கிறார். மேலும், அதில், துணிவு என்று படத்தின் பெயரும் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து, இணையத்தில் நடிகர் அஜித்தின் 61ஆவது திரைப்படமான துணிவு ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் No Guts No Glory என்ற வாசகமும் வைரலாகி வருகிறது. முன்னதாக, சமீப காலமாகவே திரைப்படங்களில் வன்முறை அதிகரித்து வருவதாக ஒரு குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் இருந்துவரும் நிலையில், தற்போது நடிகர் அஜித் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்து இருப்பது துணிவு திரைப்படத்தில் வன்முறை இருக்க வாய்ப்புள்ளதை உறுதி செய்துள்ளது.