‘ஒரு நாள் கூத்து’ மற்றும் ‘மான்ஸ்டர்’ படத்தின் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் ‘ஃபர்ஹானா’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எஸ்.ஆர் பிரபு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இதையொட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் இடம்பெற்று இருக்கும் படத்திற்கான அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் ஐஸ்வர்யா படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப இஸ்லாமிய சமூக பெண்கள் போல உடை அணிந்து காட்சியளிக்கிறார். இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.