அண்மையில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில், பாா்தி ஏா்டெல் நிறுவனமானது ரூ.43,084 கோடி மதிப்பிலான 19,867 மெகா ஹொ்ட்ஸ் அலைக்கற்றைகளை தனதாக்கியுள்ளது. இதையடுத்து, இந்த மாதத்தில் ஏா்டெல் நிறுவனம் சாா்பில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கோபால் விட்டல் கூறியுள்ளார். மேலும், உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியாவில் கைப்பேசி சேவைக்கான கட்டணம் மிகக்குறைவாக உள்ளதாகவும் இதனை உயா்த்த வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.