இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களுள் ஒன்று ஏர்டெல். இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் 5ஜி வலையமைப்பை தனியாருக்கு அமைத்துள்ளது. பெங்களூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. தர முன்னேற்றம், செயல்பாட்டுத்திறன் மேம்பாடு ஆகியவற்றுக்காகத் தொழில் பயன்பாட்டுக்கான 5ஜி வலையமைப்பை ஏர்டெல் அமைத்துள்ளது. 5ஜி வலையமைப்புச் சோதனைக்காகத் தொலைத்தொடர்புத் துறை ஒதுக்கீடு செய்த அலைக்கற்றையை இதற்காகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.