தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்படுவதாக அஇஅதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், எதிர்க்கட்சி துணைச் செயலாளர் பதவிக்கு அக்ரி கிருண்ஷமூர்த்தியை நியமிப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.