தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 19ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், எதிர்கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த திங்கட்கிழமை மாவட்ட தலைநகர்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதையொட்டி, இன்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது ஆளும் திமுக குறித்து அரை மணி நேரத்துக்கும் மேலாக அவர் ஆவேசமாக உரையாற்றினார்.