அதிமுக அலுவலகத்தின் சாவி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஈபிஎஸ்யிடம் ஒப்படைக்கப்பட்டதை எதிர்த்து ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. அதில், அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ்-யிடம் ஒப்படைத்தது தவறு என்றும் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சாவி விவகாரத்தில் எந்த தடையையும் விதிக்க முடியாது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்ட மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடக்கவுள்ளது. விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்திருந்த உச்ச நீதிமன்றம் தொடர்ந்து, இதுத்தொடர்பாக அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த வருவாய்த் துறையிருக்கும் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரப்பட்ட நிலையில், வருவாய்த் துறை விளக்கமும் இன்று நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், ஓபிஎஸ் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் இல்லை எனவே, அவர் அதிமுகவின் அதிகார உரிமையை கோர முடியாது. ஓபிஎஸ் பணம் கையாடல் செய்திருக்கிறார். கையாடல் நடத்தியுள்ள ஒருவரிடம் எப்படி அலுவலக சாவியை ஒப்படைக்க முடியும், ஓபிஎஸ் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ஈபிஎஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.