அஇஅதிமுக பொதுக்குழு, செயற்குழுகூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்க இருந்த சூழலில் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் பொதுக்குழுக்கூட்டம் நடைபெறும் அரங்கத்துக்கு வர கால தாமதமானதால், 11.30 மணிக்கே தொடங்கியது. முன்னதாக ஈபிஎஸ்க்கு முன்பாகவே ஓபிஎஸ் அரங்கிற்கு வந்து காத்திருந்தார். அவரின் வருகைக்கு முன் முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கத்தை கட்சி உறுப்பினர்கள் துரோகி என்று குறிப்பிட்டு மோடையில் இருந்து கீழே இறங்க சொல்லி கோஷங்களை எழுப்பியதால் அவர் விழா மேடையில் இருந்து கீழே இறங்கினார். பின்னர், ஈபிஎஸ் சுமார் 11.20 மணிக்கு மேலே தான் பொதுக்குழு நடைப்பெறும் இடத்துக்கு வந்தார். ஓபிஎஸ், ஈபிஎஸ்-சை தொண்டர்கள் கோலாகலமாக வரவேற்றனர்.