சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், சென்னை நீதிமன்ற அனுமதியை அடுத்து அஇஅதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை (ஜூலை 11ஆம் தேதி) தொடங்கியது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்ற செயற்குழு ஒப்புதல் பெறப்பட்டநிலையில், அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விவாதிப்பதுடன் 16 தீர்மானங்களும் நிறைவேற்றப்படவுள்ளன. இன்றைய பொதுக்குழுவில் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்று அந்த கட்சி தொண்டர்கள் எதிர்ப்பார்ப்புடன் இன்றைய பொதுக்குழுவை உற்றுநோக்கி வருகின்றனர்.