அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.பி பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் பதவியை தவறாக பயன்படுத்தி வருமானத்திற்கு அதிகமாக 315 சதவிகிதம் சொத்துக்களை குவித்ததாக பாஸ்கர் மற்றும் அவரது மனைவி மீது நான்கு பிரிவுகளின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, அவருக்கு சொந்தமான, மதுரையில் 24 இடங்களிலும், திருப்பூர் மற்றும் நாமக்கலில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் ரூ.26.52 லட்சம் பணம், 4 சொகுசு கார்கள், 1.68 கிலோ தங்கம், பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், 20 லட்சம் கிரிப்டோ கரன்சி முதலீடுகள், முக்கிய கணினி பதிவுகள் ஆகியவை சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.