தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 510 பதவிகளுக்கு ஜூலை 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், 510 பதவிகளில் 34 பதவிகளுக்கு கட்சி அடிப்படையில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தேர்தலில் சின்னம் ஒதுக்கீடு செய்ய, கட்சியால் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர், தலைமையகத்தில் இருந்து FORM-A மற்றும் FORM-Bல் கையொப்பம் பெற வேண்டும். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்புமனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில் இன்று மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடையவுள்ளது. இதற்கு முன்பாகவே தலைமை கையொப்பமிட்ட FORM-A மற்றும் FORM-B யை வழங்கினால் சின்னம் ஒதுக்கப்படும். இல்லையென்றால் அதிமுக சுயேச்சை சின்னத்தில் போட்டியிட வேண்டிவரும். ஆனால், அதிமுகவில் நிலவும் ஒற்றை தலைமை காரணமாக இதுவரை வேட்பாளர்களுக்கு படிவங்களில் ஒப்புதல் கையொப்பம் கிடைக்காததால் இந்த தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயேச்சை சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்ற சூழல் எழுந்ததால் அதிமுக காஞ்சி, தஞ்சை மாநகராட்சி, தேனி-மயிலாடுதுறை நகராட்சி, புதுக்கோட்டை மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் போட்டியிடவில்லை.