சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மதிமுக கட்சியின் தலைமை கழக செயலாளர் துரை வைகோ, மதிமுக கட்சி தலைவர் வைகோவை பற்றி மக்கள் அறிய வேண்டும் என்பதற்காக அவரின் அரசியல் பயணம் குறித்த 75 நிமிட ஆவண படம் வெளியிடப்பட உள்ளது. இதனை முதலமைச்சர் முக.ஸ்டாலின் வெளியிட உள்ளார். இந்த ஆவண படம் எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் அரசியல் கட்சிகளையும் தாக்குவதற்காக இல்லை. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக, பாஜகவை தவிர்த்து மற்ற அனைத்து கட்சிகளையும் அழைக்க உள்ளோம். எங்களை பொறுத்தவரை அதிமுக, பாஜக இரு வேறு கட்சிகள் இல்லை. நாங்கள் ஒன்றாகத்தான் பார்க்கிறோம் என்று அவர் பேசியுள்ளார்.