ஆப்கானிஸ்தான் நாட்டை தலிபான்கள் கடந்த ஆண்டு கைப்பற்றினர். ஆட்சி மாற்றத்தால் அந்த நாட்டில் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்துடன் பெண்கள் கல்வி கற்க தடை போன்ற பல்வேறு கடுமையான சட்டங்களையும் கட்டுப்பாடுகளையும் அந்த நாட்டு அரசு அறிவித்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இணையதளங்களுக்கும் தொடர் கட்டுப்பாடுகளை தாலிபான் அரசு அறிவித்து வருகிறது. இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் டிக்டாக், பப்ஜி செயலிகளை அடுத்த 90 நாட்களில் தடை செய்ய இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. முன்னதாக, 23.4 மில்லியன் இணையதளங்கள் ஆப்கானில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.