தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 19ஆம் தேதி அறிவித்திருந்தார். இதனையடுத்து, மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்களும், எதிர்கட்சிகளும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மின்கட்டண உயர்வை கண்டித்து இன்று மாவட்ட தலைநகர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதன்படி, இன்று காலை முதல் மாவட்ட தலைநகர்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், மின் கட்டணம், சொத்துவரி உயர்வை கண்டித்து சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வரும் 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக அறிவித்துள்ளது.