மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் (81) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பிறகு மூன்று நாள்களில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என அந்த கட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிர மாநிலத்தில் நவம்பர் 8ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையிலான ஒற்றுமைக்கான நடைபயணத்திலும் சரத் பவார் பங்கேற்பார் என்றும் அதில் தகவல்கள் வெளியாகியுள்ளது.