ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு மாணவர்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் குழுவை மாற்றி அமைத்து திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை அரசு வெளியீடு செய்துள்ளது. அதில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையில் பள்ளி, கல்லூரி முதல்வர், மாவட்ட கல்வி அதிகாரி, சட்டமன்ற உறுப்பினர், ஆதிதிராவிடர் இன உறுப்பினர்கள் இருவர் என்ற அடிப்படையில் ஆலோசனைக் குழு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் குழுவை மாவட்ட ஆட்சியர் அமைக்க வேண்டும் என்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை குழு மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. மேலும். 1,324 விடுதிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் வழியிலேயே விண்ணப்பிக்க வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசுக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் விடுதிகளை ஒதுக்க வேண்டும் இத்துடன் 1,324 விடுதிகளையும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்தி உணவு, வசதிகள் சரியாக உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்பன குறிப்பிடப்பட்டுள்ளது.
Admission in Adi Dravidar, Tribal Welfare School, College Hostels