2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக நடிகர்கள் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தை கொம்பன் வெற்றிக்கூட்டணியான இயக்குநர் முத்தையா-கார்த்தி மீண்டும் இணைந்து உருவாக்கியுள்ளனர். விருமன் படத்தை முத்தையா இயக்க, கார்த்தி கதாநாயகனாகவும் பிரம்மாண்ட திரைப்பட இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர்கள் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்கனவே முத்தையா-கார்த்தியின் கொம்பம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த திடைப்படத்தின் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. மேலும், கதாநாயகி அதிதியின் நடிப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காகவே ரசிகர்கள் இந்த திடைப்படத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர் என்று கூட சொல்லலாம். இந்த மாத இறுதியில் விருமன் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.