2022-ம் ஆண்டுக்கான டாப் 100 இந்திய கோடீஸ்வரர்களின் பட்டியலை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில், ரூ.12 லட்சம் கோடி சொத்து மதிப்போடு கவுதம் அதானி முதல் இடம் பிடித்துள்ளார்.
நடப்பு ஆண்டில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்த போதிலும், இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு மிகப் பெரும் அளவில் வளர்ச்சி கண்டுள்ளது என்று போர்ப்ஸ் குறிப்பிட்டுள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் டாப் 100 கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.2 லட்சம் கோடி (25 பில்லியன் டாலர்) உயர்ந்து ரூ.65.60 லட்சம் கோடியாக (800 பில்லியன் டாலர்) உள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதானி நிறுவனப் பங்குகளின் மதிப்பு 1,000 சதவீத அளவில் வளர்ச்சி கண்டன. இந்தப் பட்டியலில், 2-வது இடத்தில் முகேஷ் அம்பானி உள்ளார். அவரது சொத்து மதிப்பு ரூ.7.1 லட்சம் கோடி ஆகும். டிமார்ட் நிறுவனத்தின் நிறுவனர் ராதாகிஷான் தமனி ரூ.2.2 லட்சம் கோடி சொத்து மதிப்பைக் கொண்டு 3-வது இடத்தில் உள்ளர் என தகவல் வெளியாகியுள்ளது.
#GauthamAdani #RichestMan #pengalinkural