தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்த ரம்பா, திருமணத்திக்கு பிறகு படங்களில் நடிப்பதில்லை. தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் பங்கேற்று வந்த இவர் தற்போது, கனடாவில் கனவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், சமூக வலை தளத்தில் அவ்வபோது பதிவிட்டு வரும் ரம்பா விபத்தில் சிக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”குழந்தைகளுடன் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது என்னுடைய கார் மற்றோரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது” என பகிர்ந்துள்ளார். எனினும், இந்த விபத்தில் சிறு காயங்களுடன் குடும்பத்தினர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.