தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சியின் வாரிசு திரைப்பட நான்காம் கட்ட படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள நேற்று ஐதராபாத் சென்றார் நடிகர் விஜய். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷாம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எண்ணப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கி வரும் 25ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர், மீண்டும் சென்னை திரும்பும் நடிகர் விஜய் அடுத்த ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் ஐந்தாம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.