தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சியின் இயக்கத்தில் நடிகர் விஜய் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷாம் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். வரும் பொங்கலுக்கு வெளியாகலாம் என்று எண்ணப்படும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னை எண்ணூர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து, விஜய் படப்பிடிப்பில் பங்கேற்பதை அறிந்த அவரின் ரசிகர்கள் 500க்கும் மேற்பட்டோர் அந்த பகுதியில் திரண்டனர். பின்னர், தன்னை காண காத்திருந்த ரசிகர்களை நோக்கி நடிகர் விஜய் காரின் மீது ஏறி நின்று கையசைத்தார். இதேபோன்று, மாஸ்டர் படப்பிப்பில் விஜய் ரசிகர் முன்னிலையில் தோன்றியது வைரலானது. அதேபோன்று இன்றும் விஜய் ரசிகர்கள் மத்தியில் தோன்றியது அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.