68ஆவது தேசிய திரைப்பட விருதுகள் வெளியாது. அதில், சிறந்த நடிகருகான தேர்வில் சூரரைப் போற்று (தமிழ்) திரைப்பட கதாநாயகன் சூர்யா, தன்ஹாஜி: தி அன்சாங் வாரியர் (இந்தி) திரைப்பட கதாநாயகன் அஜய் தேவ்கன், சிறந்த நடிகைக்கான தேர்வில் சூரரைப் போற்று (தமிழ்) திரைப்பட கதாநாயகி அபர்ணா பாலமுரளி, சிறந்த திரைக்கதைக்கான தேர்வில் சூரரைப் போற்று (தமிழ்) திரைப்படத்தின் ஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா, மண்டேலா (தமிழ்) திரைப்படத்தின் மடோன் அஷ்வின், சிறந்த துணை நடிகைக்கான தேர்வில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் (தமிழ்) திரைப்படத்தின் லட்சுமி பிரியா சந்திரமௌலி, சிறந்த இயக்குநருக்கான தேர்வில் ஓ தட்ஸ் பானு (ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி) திரைப்படத்தின் ஆர்.வி. ரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, சிறந்த தமிழ் திரைப்படத்துக்காக சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளது, சிறந்த பின்னணி இசைக்காக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார், சூரரைப் போற்று (தமிழ்) திரைப்படத்துக்கும், மேலும் சிறந்த படத்தொகுப்புக்கான தேர்வில் சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும் (தமிழ்) திரைப்பட எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத்தும் தேர்வு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், சூரரைப் போற்று திரைப்படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன. இதையொட்டி, விருதுகளுக்கு தேர்வாகியுள்ள கலைஞர்களுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் வட்டாரங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து வருகின்றனர்.