சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில், ‘மண்டேலா’ படத்தின் இயக்குநர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய திரைப்படம் ‘மாவீரன்’. இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன், இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளார். புதுமுக நடிகையான அதிதி, முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி உடன் இணைந்து திரையுலகில் அறிமுமாகியுள்ள விருமன் திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது அடுத்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது. மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் இந்த திரைப்படத்தில் நடிக்கிறார்கள். படப்பிடிப்பு பூஜையில் இயக்குநர் ஷங்கர் கலந்துகொண்டார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் ‘கார்ட்டூனிஸ்ட்’ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பரத் சங்கர் இந்த திரைப்படத்துக்கு இசையமைக்கிறார்.